இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப Little Champs Season 3 பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்த செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் சந்தித்தார்.
ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் செல்வி கில்மிஸா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிர் வழங்கினார்.
இந்நிகழ்வில் செல்வி கில்மிஸா அவரின் குடும்பத்தினரும் இணைந்து கொண்டனர்.

By admin