மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட பங்குகளுக்கிடையேன கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி இரண்டு இடங்களில் நடைபெற்றன.
கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்லஸ் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட பங்குகளுக்கான போட்டி 02ஆம் திகதி சனிக்கிழமை கலையருவி சமூக தொடர்பு அருட்பணி நிலையத்திலும் வவுனியா மாவட்ட பங்குகளுக்கான போட்டி இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புபணி மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதியும் இடம்பெற்றன.
இப்போட்டிகளில் வவுனியா மாவட்ட பங்குகளை சேர்ந்த 8 குழுக்களும் மன்னார் மாவட்ட பங்குகளைச் சேர்ந்த 15 குழுக்களும் பங்குபற்றியிருந்தனர்.