மன்னார் மறைமாவட்டத்தின் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இயக்குனர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இறையியல் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாக முன்னெடுத்த இந்நிகழ்வில் பல்மொழி கரோல் பாடல்கள், கலை நிகழ்வுகள் ,நாடகம் என்பன இடம்பெற்றன.