செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2023ம் ஆண்டிற்கான ஒளிவிழா 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை பொதுமண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் திரு.கணேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை டியூக்வின்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கான கொரவிப்பும் இடம்பெற்றன.