யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய ஆயர் ஜஸ்டின் மண்டபத்தில் கழக தலைவர் இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களும் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் இடம்பெற்றது.