இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் 02ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றன.
கழக தலைவர் திரு. கீர்தபொங்கலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் கழக மூத்த உறுப்பினர்களுக்கான கௌரவிப்புக்கள் என்பன இடம்பெற்றதுடன் பொதுநிலையினர் கழகத்தால் நடாத்தப்பட்ட பொது அறிவுப்போட்டி மற்றும் பசாம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிக துறை சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பண்டத்தரிப்பு திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரி பற்றிமா ஜெயந்தி, இளவாலை ஹென்றியரசர் கல்லூரி ஓய்வு நிலை உபஅதிபர் திருமதி. சத்தியபாமினி, யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. ராஜ்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குப்பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.