இளவாலை திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்றவிழா மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றன.
செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பெரியவிளான் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் சிறப்புவிருந்தினராகவும் திருமதி ராஜ்மதன் கரோலின் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.