யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள சித்திரப்போட்டியும் கலைநிகழ்வுகளும் வருகின்ற மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
‘இயற்கையோடு இணைந்த நம் வாழ்வு’ என்னும் தலைப்பில் மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படும் இப்போட்டியில் முதலாம் பிரிவில் தரம் 4 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களும் இரண்டாம் பிரிவில் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரையான மாணவர்களும் மூன்றாம் பிரிவில் தரம் 9 தொடக்கம் தரம் 12 வரையான மாணவர்களும் பங்குபற்ற ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் வருகின்ற 25ஆம் திகதிக்கு முன்பாக தங்களின் பெயர் விபரங்களை இலக்கம் 14, யாழ்.மத்தியூஸ் வீதியில் அமைந்துள்ள கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.