கிளிநொச்சி மாவட்ட ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றமும் 2ஆம் திகதி நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.