ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய எழுச்சி கலைமாலை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பரலோக அன்னை ஆலய கலையரங்கில் நடைபெற்றது.
புனித ஜோசப்வாஸ் இளையோர் மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கரம்பொன் திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி டிலோஜினி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
அன்பியவலயங்கள்,பக்திசபையினர், பீடப்பணியாளர் பாடகர் குழாமினரின் கலை நிகழ்வுகளுடன் புனித ஜோசப்வாஸ் இளையோர் மன்றத்தினரால் ஆற்றுகை செய்யப்பட்ட “திருந்தி பார் பாப்போம்” என்னும் விழிப்புணர்வு நாடகமும் சிறப்பு நிகழ்வாக மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பக்திசபை உறுப்பினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து கொண்டனர்.