யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல மையத்தால் முன்னெடுக்கப்பட்ட திருமண ஆயத்த கருத்தமர்வு 22ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி புனித திரேசா மேய்ப்புப்பணி நிலையத்தில் நடைபெற்றது.
அகவொளி குடும்பநல மைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் முல்லைத்தீவு மறைக்கோட்டத்தைச் சேர்ந்த 15 வரையானவர்கள் கலந்து பயனடைந்தனர்.