வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொடியேற்றதத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கொடியேற்ற நாளை சிறப்பிக்குமுகமாக பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் புதிய திருமுழுக்கு தொட்டி, செபமாலைக்கடை, சிலுவைப்பாதை நிலைகள் ஆகியவற்றை ஆசீர்வதித்து திறந்துவைக்கும் நிகழ்வு அங்கு நடைபெற்றது.
ஆலயத்திற்குள் அமைக்கப்பட்ட திருமுழுக்கு தொட்டியை மணற்காட்டு பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களும் செபமாலைக்கடையை பூநகரி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களும் ஆசீர்வதித்து திறந்து வைத்தார்கள். தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிலுவைப்பாதை நிலைகளும் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் வலைப்பாடு கிராம மக்களுக்கான உலர் உணவுப்பொதிள் வழங்கும் நிகழ்வும் 18ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய அருட்பணி சபை மற்றும் ஆலய இளையோர் இணைந்து இவ் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தார்கள்.