கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களமும் யாழ். மறைக்கல்வி நடுநிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 65 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 30 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் மறை ஆசிரியர்களுக்கான போதனாமுறை பற்றிய செயலமர்வும் இடம்பெற்றன.