இலங்கையின் வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு நாளில் ஊடகத்திற்கு வழங்கிய செய்தி யொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூர்ந்து வடபகுதியின் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கபட்டிருந்தன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டபோதே குருமுதல்வர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இக்குண்டுத்தாக்குதலில் பலியானவர்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் நாங்களும் அவர்களுடன் தோழமை உணர்வோடு இணைந்து நீதிக்காக குரல்கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் நோக்கோடு இந்நிகழ்வை முன்னெடுத்திருக்கின்றோம் என தெரிவித்து வடபகுதி மக்களுக்க இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொன்பகுதி மக்களும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.