அருட்தந்தை தயாகரன் அவர்களின் “மலையில் சுரந்த மருந்து” தவக்கால சிலுவைப்பாத தியான நூல் வெளியீட்டு நிகழ்வு 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.
மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேணாட் றெக்னோ அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அன்ரன் அமலதாஸ் சிறப்பு விருந்தினராகவும், கரம்பன் சிறிய புஸ்பம் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி றொசாரி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் நூலுக்கான நயப்புரையினை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் பங்குமக்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.