அப்போஸ்தலிக்க கார்மேல் சபையை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி லங்கா மாதா மடத் தலைவியாக பணியாற்றி வருபவருமான அருட்சகோதரி டிலாந்தி அவர்களின் துறவற அர்ப்பண வார்த்தைப்பாட்டின் வெள்ளிவிழா நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வெள்ளி விழா நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் குருக்கள் அருட்சகோதரிகள் குடும்ப உறவுகள் இறைமக்களென பலரும் கலந்து அருட்சகோதரியின் பணிவாழ்விற்காக நன்றிகூறி செபித்தனர்.