போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி எல்லாவற்றையும் அழிக்கின்றன. போர்கள் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது. உரையாடலே சிறந்த வழியென வத்திக்கான புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 9ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொது மறைக்கல்வி உரைக்குப்பின் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது உரையில் உக்ரைனில் இடம்பெற்றுவரும் அறிவற்றதனமான போர் நிறுத்தப்படுவதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்துள்ள அதேநேரம்இ அந்நாட்டில் சிறுபிள்ளைத்தனமாக முதிர்ச்சியற்ற நிலையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகத் தன் கண்டனக்குரலை எழுப்பியுள்ளார்.
உக்ரைனில் நடைபெற்றுவரும் போரில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ரஸ்ய படைவீரர்கள் காயப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர் மேலும் ஒன்பதாயிரம் உக்ரேனிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.