நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக அங்கு நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது.
20ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி நற்கருணை விழாத் திருப்பலியும் அங்கு இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் யாவும் நாவாந்துறை பங்குதந்தை அருட்திரு யேசுரட்ணம் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.