இலங்கை மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவினால் பொலிஸ் மாணவச் சிப்பாய்களிற்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் அணித் தெரிவும் 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது.
தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வு 20வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர். நிரோன் ரத்னவீர அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் அருட்திரு திருமகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். யாழ் மாவட்ட பாடசாலைகளைச் சார்ந்த 300 மாணவர்கள் இதில் பங்குபற்றி பயன் அடைந்தார்கள்.