யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனராக பணியாற்றிய அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் பணிக்கு நன்றி கூறி புதிய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்ட இளையோர் ஓன்றிய செயற்குழு உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனராக பணியாற்றியதுடன் இவருடைய காலப்பகுதியில் இளையோர் பேரணி நாடகப் போட்டி கிறிஸ்மஸ் கரோல் குழுப்பாடல் போட்டி தலைமைத்துவ பயிற்சி இளையோர் மாநாடு மறைக்கோட்ட தரிசிப்புக்கள் போன்ற செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதுடன் குறும்படப் போட்டி மற்றும் ஊடகத்துறை சார் கருத்தரங்குகள் இவரால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.