நெடுந்தீவு பங்கில் எதிர்வரும் 20 திகதி தொடக்கம் மார்ச் மாதம் 20 திகதி வரை நடைபெறவுள்ள மகாஞான ஒடுக்கத்திற்கான முன்னாயத்த கூட்டம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகாஞான ஒடுக்கத்தினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டதுடன் குறித்த மாத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆன்மீக நிகழ்வுகள், பங்கின் செயற்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு விமலசேகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பங்கின் அருட்பணி சபையினர், அமல மரித்தியாகிகள் துறவற சபையினை சேர்ந்த குருக்கள் மற்றும் அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.