இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1942ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் பிறந்த இவர்; 1961ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் தந்தை செல்வாவுடன் இணைந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த இவர் இலங்கை அரச படையால் கைது செய்யப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் இருந்தார்.

அமிர்தலிங்கத்தின் மரணத்தை தொடர்;ந்து தேசியப்பட்டியல் மூலம் இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமழிரசு கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin