இலங்கை கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியான Verbum தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களான திரு, திருமதி மிலன் டி சில்வா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Verbum தொலைக்காட்சி உயிர்த்த ஆண்டவர் சிற்றாலயத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களின் தலைமையில் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருக்கள், தொலைக்காட்சி, பணியாளர்கள், நலன் விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

Verbum தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சிகளில் யாழ். மறை அலை தொலைக்காட்சியினால் யாழ். அகவொளி குடும்ப நல நிலையத்திலிருந்து வழங்கப்படும் நாளாந்த திருப்பலி வார நாட்களில் தினமும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin