உரும்பிராய் பங்கின் புன்னாலைக்கட்டுவான் கப்பம்புலம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை திரேசா ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய வரவேற்பு திருச்சொருபத்தையும் ஆலயத்தையும் ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.
புனித அன்னை திரேசா ஆலயம் 10 வருடங்களுக்கு முன்பாக முன்நாள் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் நிக்சன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் காலத்தில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து அழகிய தோற்றத்துடன் காட்சிதருகின்றது.
இவ் ஆலயம் யாழ். மறைமாவட்டத்தில் அன்னையின் பெயரில் அமையப்பெற்ற முதலாவது ஆலயம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.