மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு மகிழ்கீதங்கள் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் அவர்களின் தலைமையில் “ஆழ்ந்த துயரம் – அன்பின் செயலுருவம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தற்காலச்சூழலைப் பிரதிபலிக்கும் கிறிஸ்து பிறப்பு மகிழ் கீதங்களை இறையியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் இசைக்கப்பட்டதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் கூஞ்ஞ அவர்களால் அருளுரையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இறைமக்கள், அருட்பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin