முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாவட்ட செயலகத்தால் முல்லைத்தீவு மறைக்கோட்ட மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மேலதிக பாவட்ட செயலாளர் திரு. குணபாலன் முல்லைத்தீவு செயலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin