இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வியாகுல அன்னை கெபியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கெபி திறப்புவிழா கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் கலந்து கெபியை ஆசீர்வதிக்க மட தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி அவர்கள் அதனை திறந்துவைத்தார்.
தொடர்ந்து திருப்பலி நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் சபை முதன்மை ஆலோசகர் அருட்சகோதரி அன்ரனி கஸ்பார், நிதி முகாமையாளர் அருட்சகோதரி குவைட்லின், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin