யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் குருமட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும் குருமட முன்னாள் அதிபருமான அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.