மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி. பெலிசிற்ரா றமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மாணவர்களால் ஆற்றுகைசெய்யப்பட்ட நல்ல மேய்ப்பன் நாட்டுக்கூத்தும் மாணவர்களுக்கான பரிளிப்பும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை றெனாட் செறில்னெஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் மற்றும் சண்டிலிப்பாய் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. றவி மோகன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.