வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாகாண கல்வி அமைச்சின் செயலர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டுப் பவனி, பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி மற்றும் இயல் இசை நாடக நிகழ்வுகள் இடம்பெற்றன
.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் திரு. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வட மாகாண பிரதம செயலாளர் திரு. இளங்கோவன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கனகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் நாட்டுக்கூத்து கலைஞர் கலாபூசணம் மாசிலாமணி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.