யாழ். பல்கலைக்கழக நல்லாயன் ஆன்மீக பணியகமும் கிறிஸ்தவ நாகரிகத்துறையும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரோல் தீதங்கள், குழு நடனம் என்பன இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, யாழ். மறைக்கோட்ட முதல்வரும் யாழ். பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் நலன்புரி நிலைய இயக்குநர் பேராசிரியர் சசிகேஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin