இறையழைத்தலை ஊக்கப்படுத்தும் முகமாக யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் அழைத்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘வந்து பாருங்கள்’ நிகழ்வு கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

உருவாக்க குழுவின் இணைப்பாளர் அருட்சகோதரி றதினி கீதபொன்கலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா இறம்பக்குளம் தேசிய பாடசாலை ஆசிரியர் அருட்சகோதரி யூஜின் பாத்லெற், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் மற்றும் இயேசு சபை குருவும் வவுனியா லொயலா பல்கலைக்கழக இயக்குனருமான அருட்தந்தை எமில் லூசியன் ஆகியோர் கலந்து கருத்துரைகள் வழங்கினர்.

தொடர்ந்து கலை நிகழ்வுகளும் ஆயத்த நிலையினரின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றதுடன் வவுனியா பங்குத்தந்தை அருட்பணி டலிமா அவர்களால் இறுதி ஆசீரும் வழங்கிவைக்கப்பட்டது.

ஹப்புத்தளை, மானிப்பாய், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்த 33 இளையோர் பங்குபற்றிய இந்நிகழ்வில் யாழ் திருக்குடும்ப சபை மாகாண பொருளாளர் அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை, ஆலோசகர் அருட்சகோதரி புறோத்மேரி மரியானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin