திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியல் கல்லூரியும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த இசை இரசனை நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது.
யாழ். பிரதேச சபை கலாசார உத்தியோகத்தர் திரு. றூபகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓவிய ஆசிரியர் திரு. யூட்சன் அவர்களின் வழிப்படுத்தலில் ஓவியம் பற்றிய அறிமுகமும் அதன் மூலமாக மாணவர்களின் ஆற்றுகையூடான ஆளுமை விருத்தி பயிற்சியும், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு. கிருஸ்ணகுமார் அவர்களினால் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 100வரையான மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.