புனரமைப்பு செய்யப்பட்டுவந்த குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழாவும் ஆலய மற்றும் பலீப்பீட அபிசேக நிகழ்வும் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைந்த ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடி ஆயர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

138 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாழ்ந்துவரும் பங்குமக்களின் தாராள நிதியுதவியுடன் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் புனரமைப்பு செய்யப்பட்டு அழகிய தோற்றத்துடன் காட்சிதருகின்றது.

By admin