TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லயன்ஸ் கழக முன்னாள் தலைவர். திரு. ரட்ணம் கோகுலன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் நட்சத்திரம், திருமதி. தனேஸ்குமார் சத்தியபாமா, யாழ்ப்பாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. இராமசாமி இராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிழ்வில் நிறுவனத்தில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பணியாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் நிறுவனத்தில் பணியாற்றி இறைபதமடைந்த திரு. வைஸ்ணவன் அவர்களுக்கான நினைவஞ்சலியும் இடம்பெற்றது.
திரு. ராமசாமி துசாந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இந்நிறுவனம் யாழ்ப்பாணத்தை தலைமையகமாககொண்டு தற்போது 20 பணியாளர்களுடன் முதியோர் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையை ஆற்றி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.