கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மூன்று மொழிகளும் உள்ளடக்கப்பட்ட திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் அருட்தந்தை இருதயதாஸ், கிளிநொச்சி உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன், யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட், அருட்சகோதரிகள், பங்குமக்கள், பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்து செபித்தனர்.