புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் “மறைக்கல்வி எழுச்சி மாத” சிறப்பு நிகழ்வுகள் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வுகள் இடம்பெற்றன.
இக்கருத்தமர்வில் 100 மறைக்கல்வி மாணவர்களும் 10 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்ததுடன் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியுக் வின்சன்ட் மற்றும் மறைக்கல்வி நிலைய பணியார்கள் வளவாளர்களாக கலந்து நிகழ்வை வழிப்படுத்தினர்.