யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புனரமைப்பு செய்யப்பட்ட குருமட திறப்பு விழாவும் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

கொடியோற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் புனரமைப்பு செய்யப்பட்ட குருமடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து குருமட சிற்றாலயத்தில் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து குருமட கேட்போர்கூடத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருமட மாணவர்களின் படைப்பான தேன் அரும்பு கையெழுத்து நூலின் 16ஆவது இதழ் வெளியிடப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வாக True love of Leif and the master maid ஆங்கில நாடகமும் மேடையேற்றப்பட்டன.

இந்நாளை சிறப்பித்து அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றதுடன் இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருமடமாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மறைமாவட்டத்தின் இதயமாக விளங்கும் 155 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்குருமடம் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய இன்னும் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற ஆயர்களையும் ஆயிரக்கணக்கான குருக்களையும் உருவாக்கிவருகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்குருமடத்தின் புனரமைப்பு பணிக்கான முற்றுமுழுதான நிதி உதவியை ஆயர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருத்தந்தையின் நிதியம் வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin