வடமாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சமன்பத்திரன அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பில் வடமாகாண சுகாதார வைத்திய பிரிவினரால் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு யாழ். மறைமாவட்டப் பங்குகளில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு பங்குத்தந்தையர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு வடமாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திரு. கேதீஸ்வரன், பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் எமில், யாழ். சுகாதார பணிமனை வைத்தியர் தவரூபன், மற்றும் யாழ்ப்பாண பொது சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

By admin