ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் செயலாளர் நாயகம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் திரு. தயானந்தா, சட்டத்தரணி திரு. ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட திரு. சிறிதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 16ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்ற இச்சந்திப்பில் திரு. சிறிதரன் அவர்கள் ஆயர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் ஆயரின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார்.

By admin