செபமாலைமாத நிறைவை சிறப்பித்து யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் டிசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மறைக்கல்வி நிலையத்தில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக புனித அடைக்கல அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து இறுதி ஆசீர் வழங்கினார்.
இப்பேரணியில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறாயன், மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேறோ செல்வநாயகம், மறைக்கோட்ட பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரரிகள், மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இளையோர்களென 200 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.