மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் கருப்பொருளில் கடந்த 28, 29, 30ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது.
மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் யூபிலி ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கண்டி மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அல்வின் பெர்னாண்டோ, கண்டி அம்பிட்டிய தேசிய குருமட விரிவுரையாளர் அருட்தந்தை உதயதாஸ், மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்தந்தை நெவின்ஸ் யோகராஜா பீரிஸ் மற்றும் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ ஆகியோர் வளவாளர்களாக கலந்து யூபிலி ஆண்டு தொடர்பான கருத்துரைகள் வழங்கி குழு ஆய்வுகளையும் வழிநடத்தினர்.
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், துறவற சபைகளின் பிரதிநிதிகள், துறைசார் வல்லுநர்கள், பங்கு பிரதிநிதிகள், பொதுநிலையினரென 250 வரையானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.