புனித பவுல் சபையை சேர்ந்த அருட்தந்தை சஜித் சிறியக் அவர்களால் எமுதப்பட்ட Consecrated life in the Digital Age என்னும் நூல் உள்ளடக்கியுள்ள விடயபரப்பின் பயன்பாட்டை வெளிக்கொணரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
கன்னியர் மட மாகாண தலைமைக்குழு மற்றும் கன்னியர் மட உருவாக்கல் குழுமத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்நூல் உள்ளடக்கத்தை பணித்தளங்களில் பயன்படுத்தும் முறைமை பற்றிய விடயங்களை அருட்சகோதரிகள் கலைநிகழ்வுகள் ஊடாக முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் கொழும்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ், யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் மற்றும் திருமதி றெஜினா இராமலிங்கம் ஆகியோர் கலந்து கருத்துரை வழங்கினர்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் இந்நிகழ்வில் அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் மற்றும் அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.
இந்நூல் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பின்னணியில் ஆன்மீக, சமய மற்றும் துறவற வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.