இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் கடந்த13ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்வருடம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் யூபிலி ஆண்டை நினைவுகூரும் ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவக் குருவாகிய அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட பழைய மாணவக் குருக்கள் திருப்பலியை ஆயருடன் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசீரும் தொடர்ந்து கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் கல்லூரி தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஹென்றியரசர் கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு. ஜொய்சி அலோசியஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஆயர் அவர்களுக்கு குருத்துவ பொன்விழா யூபிலியை நினைவு கூர்ந்து கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலாச்சார விளையாட்டுக்களும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ  பழைய மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் கல்லூரி தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
 இவ் இரத்ததான முகாமில் 16 வரையானவர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.

By admin