யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட காற்பந்து பயிற்சிநிலைய அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட வீரர் திரு. திருமதி கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளை ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் தேசிய உதைபந்தாட்ட வீரர் திரு. நிதர்சன் மற்றும் Pயவசiஉயைn ளுpழசவள ஊடரடி செயலாளர் திரு. ரஞ்சித் தேவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சிநிலையத்திற்கான நிதியுதவியை லண்டன் நாட்டில் வாழ்ந்துவரும் கல்லூரியின் பழைய மாணவர் திரு. பிரசாந்தராஜா அவர்கள் வழங்கியிருந்தாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.