நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை உடுவில் மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
அத்துடன் நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மருதமடு அன்னை திருவிழா பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.