மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூக தொடர்பு அருட்பணி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சமூக ஊடகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.
நிலைய இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் லோகு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை மற்றும் அருட்தந்தை டக்ளஸ் லோகு ஆகியோர் வளவாளர்களாக இளையோரை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தை சேர்ந்த 35 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.