நாவாந்துறை பங்கில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தநந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 43 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin