கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin