நம்பிக்கையின் திருப்பயணிகள் என்ற தலைப்பில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு கத்தோலிக்க திரு அவை ஜூபிலி ஆண்டை கொண்டாட இருக்கிறது.
இதற்கு ஆயத்தமாக வருகிற 2024ஆம் ஆண்டை இறை வேண்டுதல் ஆண்டாக திருத்தந்தை பிரானசிஸ் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளநிலையில் திருஅவையின் வளர்ச்சிக்கு இறை வேண்டுதலின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளுமுகமாக பல செயல்பாடுகள் முன்னெடுக்கபட்வுள்ளன.
இவ்வாண்டை சிறப்பான முறையில் கடைப்பிடிக்க இலங்கை ஆயர் பேரவையும் அழைப்புவிடுத்துள்ளது.
இவ் இறைவேண்டுதல் ஆண்டின் செயல்பாடுகளை யாழ் மறைமாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு உதவியாக கடந்த 6ஆம் திகதி ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குருக்கள் மன்ற கூட்டத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.